பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அண்மையில் இராணுவத் தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன உத்தியோகபூர்வ முறைப்படி வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் இராணுவத் தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்குச் சென்று, மறுசீரமைப்புச் செயன்முறை உட்பட இலங்கை இராணுவத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இராணுவத் தலைமையக அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இராணுவப் பணியாளர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு, தொழில்முறைமை மற்றும் சேவையை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், இராணுவத்தின் ஏனைய நிலைச் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிரதிநிதிகளையும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் மூலம் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பங்களிப்புகளை நேரடியாகக் கேட்டறிந்து அவர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









