இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணானந்தவை நினைவு கூரும் வகையில் வெளியிடப்பட்ட தபால் முத்திரை!

1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தளராத தைரியத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்திய இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணானந்தவை நினைவுகூரும் வகையில், 70 ரூபாய் பெறுமதியான புதிய நினைவு தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த தபால் முத்திரையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் வைத்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 20.10.2026 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமாடா, அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ, அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற கருணானந்த, ஏனைய போட்டியாளர்கள் பந்தயத்தை நிறைவு செய்த பின்னரும் மனம் தளராது தொடர்ந்து ஓடி தனது பந்தயத்தை நிறைவு செய்தார். அவரது இந்த விடாமுயற்சி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் “தைரியமான தோல்வியாளர்” எனப் போற்றப்பட்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டெழுந்த ஜப்பானிய மக்களுக்கு விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய அவரது வாழ்க்கை வரலாறு, ஜப்பானிய பாடசாலைப் பாடநூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

அவரது தைரியம், ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியைப் போற்றும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல்தலைப் பணியகத்தினால் இந்த நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வில், ரணதுங்க கருணானந்தவின் புதல்வர் சன்ன கருணானந்த உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects