ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்!

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், ஜனாதிபதியின் செயலாளரும் ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் 20.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தின் செமா கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2025/2026 ஆம் ஆண்டுகளில் நலன்புரிச் சங்கத்தினால் உறுப்பினர்களின் நலன்புரியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், நிர்வாக சபையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், எதிர்காலத்திலும் அனைவரின் ஒத்துழைப்புடன் நலன்புரிச் சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

2025/2026 வருடாந்த அறிக்கை சங்கத்தின் கௌரவ செயலாளர் சமித் தலகிரியாவவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சங்கத்தின் வருடாந்த நிதி அறிக்கை சங்கத்தின் கௌரவ பொருளாளர் தமித் விக்ரமரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சங்கத்தின் கௌரவ உப தலைவர் ரோஷன் கமகே கருத்துத் தெரிவிக்கையில், நலன்புரிச் சங்கம் தனது செயற்பாடுகளில் பொதுமக்களின் பணம் ஒரு சதத்தையேனும் செலவிடாமல் செயற்படுவதுடன், சங்கத்தின் செயற்பாடுகள் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டித் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பாராட்டினார்.

உறுப்பினர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகப் பல புதிய முன்மொழிவுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 2025/2026 ஆம் ஆண்டு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டுக் குழுக்களில் செயற்பட்ட உறுப்பினர்களைப் பாராட்டியதுடன், 2025/2026 நிர்வாகக் குழுவில் செயற்பட்ட அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களை கௌரவத் தலைவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பதவியிலிருந்த நிர்வாக சபை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகச் சபையொன்று இங்கு நியமிக்கப்பட்டது.

இதன்படி, தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் பதவிவழியாக நியமிக்கப்பட்டதுடன், உப தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சட்டத்தரணி ரோஷன் கமகே, செயலாளராக ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி சமித் தலகிரியாவ, பொருளாளராக ஜனாதிபதி நிதியத்தின் பிரதான கணக்காளர் தமித் விக்ரமரத்ன, பதிவாளராக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தில்ஷான் மதுசங்க ஆகியோர் சபையினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், பிரதான அமைப்பாளராக தம்மிக தஸநாயக்க, கௌரவ பிரதிச் செயலாளர்களாக சிரோமி மாபா, சதுரிகா மனதுங்க ஆகியோர் இந்நிகழ்வில் புதிய நிர்வாக சபைக்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects