ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை!

ஜப்பானில் நடைபெறும் 05 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் அவர் 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கத்தையும், சீன வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சதுனி ஜயசுந்தர 4.11 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம், இம்முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் பெண்களுக்கான T47 பிரிவு 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

ஜனனியின் இந்த வெற்றி, சர்வதேச பரா மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects