நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் 3 ஆம் இலக்க மின் உற்பத்தி அலகு இன்று (23.10.2026) காலை மீண்டும் தேசிய மின்வழமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 1 ஆம் இலக்க மின் உற்பத்தி அலகு இன்று பிற்பகலுக்குள் தேசிய மின்வழமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி அலகுகள் அனைத்தும் முழுமையாக இயங்கத் தொடங்கும்போது, அவற்றின் மூலம் தேசிய மின் இணைப்புக்கு சேர்க்கப்படும் மொத்த மின் உற்பத்தி திறன் 810 மெகாவாட் (MW) ஆகும்.
இந்நிலையில், இனிமேல் நாளாந்தம் சுழற்சி முறையில் மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியமிருக்காது என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மின் கடத்தல் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையினாலேயே 17.10.2026 அன்று காலை 11:43 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது.
இதளால், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் செயலிழந்தன.
அதனைத் தொடர்ந்து, மின் விநியோகத்தை சீரமைப்பதற்காக நாட்டை 4 மண்டலங்களாகப் பிரித்து, தினமும் ஒரு மணி நேர மின் மேலாண்மை நடவடிக்கையை தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








