ரம்புக்கனை – பேராதனை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ரம்புக்கனை மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டு, ரயில் மார்க்கத்தில் மண் அடித்துச் செல்லப்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த அபாயகரமான சூழ்நிலையைத் தவிர்த்து, ரயில் மார்க்கத்தை சீரமைப்பதற்கான அவசரப் புனரமைப்புப் பணிகளை நாளை (24.10.2026) மற்றும் நாளை மறுதினம் (25.10.2026) ஆகிய இரு தினங்களில் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட அந்த இரண்டு நாட்களிலும் ரம்புக்கனை – பேராதனை மற்றும் கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு நாட்களுக்காக பணம் செலுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள், தாம் செலவழித்த முழுத் தொகையையும் எந்தவொரு ரயில் நிலையத்திலிருந்தும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects