மட்டக்களப்பில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்வு!

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இணையவழி முகாமைத்துவத் தகவல் முறைமையில் தரவுகளைப் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் 21.10.2026 அன்று பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.எம்.ரூவைத், உதவிப் பணிப்பாளர் கே.யோகநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரஜாசக்தி திட்டத்தின் பணிப்பாளர் ஜி.சுமேத, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சரதாஞ்சளி மனோகரனினால் தரவுப் புத்தகம், தரவுக் கட்டமைப்பு மற்றும் தகவல்களை இணையவழி முறைமையில் பதிவுசெய்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கிராமிய வறுமையை ஒழித்து, மக்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக அபிவிருத்திச் சபைகளினூடாக அடையாளம் காணப்படும் மக்களின் தேவைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களைத் துல்லியமாகப் பதிவு செய்தல், அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுதல், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றில் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேசிய ரீதியில் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமைக்காக அதிகாரிகளினால் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects