2026 ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “ஒர்னாப்” (Arnab) என்ற பாரிய புயலானது, ஒரு மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, இன்று, ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 02.30 மணிக்கு வட அகலாங்கு 15.50 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 85.40 E இற்கும் அருகில் காங்கேசன்துறைக்கு வடகிழக்காக சுமார் 890 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது ஒக்டோபர் 27ஆம் திகதி பிற்பகல் 05.30 மணி வரை தொடர்ந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, அதன் பின், பெரும்பாலும் வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், ஒக்டோபர் 28 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் ஒரு மிகத் தீவிர புயலாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இத் தொகுதியால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் எதுவும் ஏற்படாது என்றாலும், இத் தொகுதியுடன் தொடர்பான காற்று வீச்சு நாட்டுக்குக் குறுக்காகப் பரவுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








