மட்டக்களப்பில் விழிப்புணர்வு கண்காட்சிக்கான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் விழிப்புணர்வு கண்காட்சிக்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.10.2026 அன்று நடைபெற்றது.

முழுநாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம், தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் இந்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினரைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், ”வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள்” எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வுக் கண்காட்சி நிகழ்வு 2026ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

“வாழ்க்கையைத் தெரிவுசெய்வோம் – எதிர்காலத்தைப் தெரிவுசெய்வோம்” என்ற செய்தியை முன்னிறுத்தி, போதைப்பொருள் அற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்குமான விழிப்புனர்வு கண்காட்சி எதிர்வரும் மாதம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் உடல், உள மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

இதன்போது, போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தெரிவுசெய்வதன் முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects