தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி,

நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவாக 54,783 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் தென் மாகாணத்தில் 14,954 பேரும், மத்திய மாகாணத்தில் 10,549 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 8,629 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவாக 22,094 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் 20,453 பேரும், கண்டி மாவட்டத்தில் 8,398 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,593 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 4,575 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், கொள்கலன்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முறையாக அகற்றுவதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects