மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கல்வி உபகுழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கல்வி உபகுழுக் கூட்டம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் இணைப்பாளரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஏற்பாட்டில் 27.10.2026 அன்று பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “Door to Door Skill Campaign” தேசிய வேலைத்திட்டத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதன் போது மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், காட்டு மிருகங்களின் தாக்குதல், பாடசாலை இடைவிலகல் மற்றும் தொழிற்கல்வித் துறையின் முறைமையினூடாக கல்வி பயின்ற மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களைத் தொழில் வாய்ப்புகளுடன் இணைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதுடன் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் வனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாகாண கல்வி அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், தொழிற் கல்வி நிறுவன தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது அதி கஷ்ட பிரதேசத்தில் வறுமை, காட்டு மிருகங்களின் தாக்குதல், பாடசாலை வெகு தூரத்தில் உள்ளமை போன்ற காரணங்களினால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக இதன் போது சுட்டிக் காட்டப்பட்டதுடன் சிறுவர் இல்லங்களில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைளை தொடரும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects