துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இணைந்ததாக, நாட்டின் ஏனைய உள்நாட்டு விமான நிலையங்களையும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து 27.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அதனுடன் இணைந்ததாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய விமான நிலையங்களின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் வான்வழிப் பயணிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் விமான நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ரசல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ. கே. செனவிரத்ன மற்றும் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்சன் உள்ளிட்ட அமைச்சுக்கள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects