விவசாயத் திணைக்களத்தில் 850 பேருக்கு நிரந்தர நியமனம்!

விவசாயத் திணைக்களத்தில் 850 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கண்டி கன்னொருவையில் அமைந்துள்ள தாவர மரபணு வள நிலையத்தில் வைத்து 27.10.2026 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவும் கலந்துகொண்டார்.

இதன்படி, இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு 690 பேருக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 160 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நியமனங்கள் தொழில்நுட்ப அலுவலர்கள், பண்ணை எழுத்தர்கள், விதைத் தொழில் பிரிவினர் மற்றும் குடியிருப்பு கட்டுப்பாட்டு அரச அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக விவசாயத் திணைக்களத்தில் நிரந்தர நியமனமின்றிப் பணியாற்றிய ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்தி, நாட்டின் விவசாயத் துறையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects