மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 28.10.2026 அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மஃஜூத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சுயதொழில் உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







