மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு பொது நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் 28.10.2026 அன்று மட்டக்களப்பு பொது நூலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், புத்தகக் கண்காட்சியும் விற்பனையும், உணவுக்கூடங்களும், புதிய அருங்காட்சியகத்திற்கான பொருட்கள் சேகரிப்பும், கலைஞர்களுக்கான திறந்த மேடையும், நூல் பரிமாற்ற நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நூல்களின் மீதான ஆர்வத்தை வளர்த்தல், அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாசிப்புக் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக உள்ளது.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ் குமார், தவிசாளர்கள், நூலகக் குழு தலைவர் துரைசிங்கம் மதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கல்வி நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி, பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் வாசிப்பு என்பது ஒரு மாதத்தினுல் வாசிப்பு மாதமாக வரையரை செய்யாது வாழ் நாள் முழுவதும் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாநகர சபையினால் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடத்தினை வெற்றி பெற்ற புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மாணவியருக்கு பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects