உஸ்பெகிஸ்தானை தளமாகக் கொண்ட Centrum Air நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி வானூர்தி சேவைகளை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையில் புதிய வான்வழித் தொடர்பு உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக நாட்டின் சுற்றுலாத் துறையும் ஒரு புதிய பாதைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வானூர்தி சேவை 2026 – 2027ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பருவத்திற்காக வாரத்திற்கு இருமுறை, அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையானது சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








