கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 6 ஆவது நல்லையா நினைவுப்பேருரை நிகழ்வு!

மட்டக்களப்பு மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் முதலானவற்றில் விருத்திபெற அயராது உழைத்த அரசியல் ஆளுமையான வல்லிபுரம் நல்லையாவின் நினைவாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தால் வருடந்தோறும் நிகழ்த்தப்படுகின்ற நினைவுப் பேருரை இவ்வருடமும் ஒழுங்கமைப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் தலைமையில் 28.10.2026 அன்று நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறைப் பேராசிரியர் சின்னத்தம்பி சந்திரசேகரம் ‘தன்வரலாற்று எழுதியலும் ஈழத்துத் தமிழ் தன்வரலாறுகளின் சமூகப் பெறுமானமும்’ என்னும் தலைப்பில் நினைவுப் பேருரையினை ஆற்றினார்.

அப்பேருரையானது இதன்போது நூலாக வெளியிடப்பட்டதுடன், இவ்வாண்டுக்கான நினைவுப் பேருரையின் இணைப்பாளர் பாஸ்கரன் சுமன் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects