இலங்கையில் அறிமுகமாகியுள்ள முதலாவது இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டம்!

இலங்கை உயர் கல்வியில் ஒரு மைல்கல்லாக, அவுஸ்திரேலியாவின் சதர்ன் க்ராஸ் பல்கலைக்கழகம் (Southern Cross University) மற்றும் என்.எஸ்.பி.எம் கிரீன் பல்கலைக்கழகம் (NSBM Green University) ஆகியவை இணைந்து வழங்கும் நாட்டின் முதலாவது இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்க விழா 26.10.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், சதர்ன் க்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டைரோன் கார்லின் மற்றும் என்.எஸ்.பி.எம் கிரீன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஈ. ஏ. வீரசிங்க ஆகியோருடன் இராஜதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வித்துறை தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நான்கு வருட ஒருங்கிணைந்த திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பட்டப்படிப்பு, மாணவர்கள் வணிகவியல் இளமானி (Bachelor of Business) மற்றும் தகவல் தொழில்நுட்ப இளமானி (Bachelor of Information Technology) ஆகிய இரு பட்டங்களையும் ஒரே நேரத்தில் பெற வழிவகை செய்கிறது.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அங்கு முதன்மை உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்,

இலங்கையின் எதிர்கால வளம் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறனும் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறனும் கொண்ட பணியாளர்களிலேயே தங்கியுள்ளது என்றும், இதுவே தேசிய டிஜிட்டல் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் மையப்பகுதியாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதுடன் அவற்றின் வணிக ரீதியான செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பன்முகத் திறன் கொண்ட நிபுணர்களைக் கோருகிறது என அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) போன்ற அதிக தேவையுள்ள தொழில்நுட்பத் துறைகளை, அத்தியாவசிய வணிக மற்றும் தொழில்முனைவு அறிவோடு ஒருங்கிணைப்பதன் மூலம், இத்தகைய பட்டப்படிப்புகள் நாட்டின் திறமைமிக்க மனிதவளத்தை விரிவாக்குவதுடன் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியை கணிசமாக விரைவுபடுத்துகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், உயர் மதிப்புமிக்க வேலைவாய்ப்புகளையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்க டிஜிட்டல் திறன்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects