‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இவ்வாறு தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுக்கு அமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு குறித்து திருப்தியடையாத தகுதியான பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








