ஒக்டோபர் மாதத்தில் 136,093 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 136,093 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன், இந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்து இருபத்தொன்பதாயிரத்து எழுபத்திரண்டு (1,829,072) ஆகும்.

அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன்; பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects