ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, இலண்டன் மிருகக்காட்சிசாலையில் (London Zoo) பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்குப் பூசணிக்காய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விசேட உணவுகள் வழங்கப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த பண்டிகைக் காலச் சிறப்பம்சமாக மிருகக்காட்சிசாலையிலுள்ள பென்குயின்கள், கொரில்லாக்கள், கெபிபாராக்கள் (Capybaras) மற்றும் புலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளுக்குப் பூசணிக்காய்கள் வழங்கி உபசரிக்கப்பட்டன.
விலங்குகளின் இயல்பான உணவு தேடும் திறனையும், கூர்மையான புலன்களையும், சுறுசுறுப்பையும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு விலங்கினதும் விருப்பத்திற்குரிய பிரத்தியேக உணவுகள் பூசணிக்காய்களுக்குள் நிரப்பப்பட்டு, அவற்றை விலங்குகள் தேடிக் கண்டறியும் வகையில் வழங்கப்பட்டதாக மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையான சூழலில் விலங்குகள் உணவு தேடும் முறைமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த நடவடிக்கை, மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









