2,819 தாதியர்களுக்கு நியமனம்!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் தாதியர் பாடசாலைகளில் மூன்றாண்டு பாட நெறியை நிறைவு செய்த 2020 ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழுவைச் சேர்ந்த 2,819 பயிற்சி தாதியர்களுக்கு, தரம் மூன்று தாதியர் உத்தியோகத்தர்களாகச் சுகாதார சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அன்று நடைபெறவுள்ளது.

முற்பகல் அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்வாறு நியமனம் பெறும் தாதி உத்தியோகத்தர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இந்நடவடிக்கையானது வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தாதியர் சேவையை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களுக்குத் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான மனித வளத்தைப் பூர்த்தி செய்வதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு தற்போது வைத்தியசாலைச் சேவையில் ஈடுபட்டுள்ள முதலாம் தர தாதியர்கள் 76 பேருக்கு, சிறப்புத் தர தாதியர் உத்தியோகத்தர்களாக தரமுயர்த்துவதற்கான பதவி உயர்வுக் கடிதங்களும் வழங்கப்படவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects