நாட்டில் பெரும்போகத்திற்குப் போதுமான உரம் கையிருப்பில் உள்ளது – தேசிய உரச் செயலகம்

பெரும்போகத்திற்குப் போதுமான உரக் கையிருப்பு நாட்டில் உள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

போகத்திற்குரிய உர விநியோக நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே வலியுறுத்தினார்.

பெரும்போகத்திற்கு 1,80,000 மெட்ரிக் தொன் யூரியா தேவைப்படுவதாக சந்தன லொக்குஹேவகே தெரிவித்தார்.

தற்போது பிரதேச மட்டத்தில் சுமார் 33,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 42,000 மெட்ரிக் தொன் நிறுவனங்களிடம் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்தார்.

அத்துடன், கடந்த மாத இறுதியில் உரமேந்திய மூன்று கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து 98,700 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 44,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2,18,000 மெட்ரிக் தொன் யூரியா நாட்டில் உள்ளதாக சந்தன லொக்குஹேவகே சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அடி உரமாக பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் TSP மற்றும் உள்நாட்டு SSP உரங்களும் போதுமான அளவில் உள்ளன.

அதன்படி, இதுவரை 4,396 மெட்ரிக் தொன் TSP உரமும், 511 மெட்ரிக் தொன் SSP உரமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்களிடம் 16,700 மெட்ரிக் தொன் TSP உரமும், 5,000 மெட்ரிக் தொன் SSP உரமும் கையிருப்பில் உள்ளதாக தேசிய உரச் செயலகம் குறிப்பிடுகிறது.

21,000 மெட்ரிக் தொன் TSP உரத்தையும், 5,000 மெட்ரிக் தொன் SSP உரத்தையும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களிடம் மேலும் 10,000 மெட்ரிக் தொன் SSP உரம் கையிருப்பில் உள்ளதுடன், அதன்படி சுமார் 31,000 மெட்ரிக் தொன் அடி உரம் நிறுவனங்களிடம் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்தார்.

பெரும்போகத்திற்குத் தேவையான அடி உரத்தின் அளவு 25,000 மெட்ரிக் தொன் ஆகும்.

தவிர, பெரும்போகத்திற்கான பண்டி உரம்  57,000 மெட்ரிக் தொன் தேவைப்படுவதுடன், தற்போது நாட்டில் 57,500 மெட்ரிக் தொன் உரக் கையிருப்பு உள்ளது.

அவற்றில் இதுவரை சுமார் 5,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களிடம் உள்ள MOP உரத்தின் அளவு 50,500 மெட்ரிக் தொன் ஆகும்.

மேலும் 2,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, பெரும்போகத்திற்குத் தேவையான உரக் கையிருப்பு நாட்டில் உள்ளதுடன், அவற்றை விவசாய சேவை மத்திய நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects