மலையக புகையிரதப் பாதையின் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையே, 162/54 மைல் கல் பகுதிக்கு அருகில் இன்று (04.11.2026) அதிகாலை பாரிய மண் மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்தமையினால் புகையிரத போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
புகையிரதப் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை செல்லலாம் என நானுஓயா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ புகையிரதம் இன்று பண்டாரவளை புகையிரத நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
அத்துடன், புகையிரதப் பாதை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணிக்கும் அனைத்துப் புகையிரதங்களும் இன்றைய தினம் இயக்கப்பட மாட்டாது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







