பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகள், அதன் எதிர்கால அபிவிருத்தி மற்றும் அது தொடர்பான கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் 03.11.2026 அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், இலங்கையின் உள்நாட்டு மருத்துவத் துறையின் முக்கிய அங்கமாக விளங்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அறிவு மற்றும் சிகிச்சை நுட்பங்களைப் பாதுகாத்தல், மருத்துவத் தொழிலை முறைப்படுத்துதல் மற்றும் குருகுலக் கல்வி மரபைப் பேணிப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

சங்கத்தின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேலதிக கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடி, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உள்நாட்டு மருத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர்களான சமந்தி ரணசிங்க, யூ.எஸ்.கே. தென்னவத்த, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன, பிரதி ஆயுர்வேத ஆணையாளர் அனுஷா துலந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், ஆயுர்வேத மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் மஹேல சம்பத், உள்நாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சாரங்கா சரத்சந்திர, அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் தலைவர் ஆயுர்வேத விசாரத பண்டித வைத்தியர் ஜயவீர பீரிஸ், செயலாளர் வைத்தியர் விமல் பியதிலக்க, பொருளாளர் வைத்தியர் ஜயரத்ன நந்ததேவ மற்றும் பிரதி செயலாளர் வைத்தியர் ஹென்றி பீரிஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects