1,70,950 விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியம் – 3,975 தபாலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் 60 வயதைப் பூர்த்தி செய்த 170,950 விவசாயிகளுக்கு 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஓய்வூதியமாகச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024 ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டம் கட்டமாகத் தேங்கிக் கிடந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கிடைக்கப் பெற்றுள்ள குறைபாடற்ற விண்ணப்பங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சரியாக தவணைப் பணத்தை செலுத்தாத மற்றும் 25%க்கும் அதிகமான தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ள பங்களிப்பாளர்களுக்கு நிகர தவணைப் பணத்தை (Net installments) தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 2014 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியத்தைச் செலுத்தும் வேலைத்திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கொடைக்கு அமைய இந்த நிலுவைத் கொடுப்பனவுகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects