2027 ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள TIN இலக்க கட்டாயமாக்கல் நடைமுறை!

8 அத்தியாவசியப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டாய விதிமுறைக்கு மேலும் 5 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டமை மற்றும் இணையவழிப் பதிவு முறைமையில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects