புகையிரதங்களில் காட்டுயானைகள் மோதுவதை தவிர்க்க அறிமுகமாகும் புதிய திட்டம்!

காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் குழு அறை இலக்கம் 3 இல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கான முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், கிழக்கு புகையிரத பாதையில் காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதும் அபாயத்தைக் குறைப்பதற்காக நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட பல நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, கிழக்கு புகையிரத பாதையில் தற்போது இயங்கும் புகையிரத இயந்திரங்களுக்கு பதிலாக, சுற்றியுள்ள சூழலைச் சிறப்பாகக் கண்காணிக்கக்கூடிய மற்றும் ரயிலின் வேகத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தக்கூடிய நவீன புகையிரத இயந்திரங்கள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சாரதிகள் முன்னால் உள்ள பாதையைத் தெளிவாகக் அவதானிக்கக்கூடிய வகையில் அதிசக்தி வாய்ந்த இயந்திரங்களை சேவையில் இணைப்பது குறித்தும், காட்டு யானைகள் புகையிரத பாதையைக் கடக்கும் இடங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதுதவிர, ஹபரணை புகையிரத நிலையத்திலிருந்து கந்தளாய் நோக்கிப் பயணிக்கும் போது 133 1/2 மைல் கல்லுக்கு அருகில் உள்ள பகுதிக்கு நீர் அருந்துவதற்காக வரும் காட்டு யானைகள் புகையிரத பாதைக்கு அருகில் வருவதைத் தடுப்பதற்காக, மாற்று நீர் ஆதாரங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொருத்தமான இரண்டு இடங்களில் நீர் தடாகங்களைக் கட்டி அவற்றுக்கு நீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects