தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பேருந்து சேவைத் திட்டம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை பிரத்தியேகச் சிறப்புப் பேருந்து சேவைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய நுவரெலியா, ஹட்டன், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக நூற்றுக்கணக்கான மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், மத்திய பேருந்து நிலையம் 24 மணிநேரமும் தொழிற்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி, இலங்கை போக்குவரத்து சபை இன்று (06.11.2026) முதல் விசேட பேருந்துச் சேவைகளை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வழக்கமாக 780 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகை கால நெரிசலை முகாமைத்துவம் செய்வதற்காக மேலதிக பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகளவிலான பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக 102 மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இதே வேளை, நாளை (07.11.2026) 74 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்தோடு தீபாவளி தினமான 08.11.2026 அன்று 43 மேலதிக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தற்போது புகையிரத சேவைகள் முழுமையாக இயங்காத சூழல் உள்ளதால், அப்பயணிகளின் சுமையையும் போக்கும் வகையில் பேருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஹட்டன் மற்றும் நுவரெலியா போன்ற அதிக தேவை நிலவும் போக்குவரத்து பாதைகளுக்கு பிற பிரதேசங்களிலிருந்து தற்காலிகமாக சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்த ஊழியர்களின் அத்தியாவசிய விடுமுறைகள் தவிர ஏனைய விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், பேருந்து கட்டணங்கள் மற்றும் புறப்படும் நேரங்களை அறிவதற்கும் அங்கு பிரத்தியேகத் தகவல் மையம் செயற்படும்.

மேலும், எதிர்பாராத அவசர தேவைகளுக்காக 20 சிறப்புப் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தில எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects