தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கான ஆன்மீக ஊக்கவுரையும், சிறப்புப் பூசை வழிபாடும் தீபாவளி தினமான 8-11-2026 அன்று பிரதம ஜெயிலர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த மகராஜ் கலந்து கொண்டு சிறைச்சாலைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டினையும், அதனைத்தொடர்ந்து சிறைக்கைதிகளுக்கான ஆன்மீக ஊக்கவுரையினையும் நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க அஙகத்தவர்கள், சிறைக்கைதிகள் ஆகியோர் பங்குகொண்ட இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனினால் அனைவருக்கும் விசேட இனிப்புப் பண்டங்களும், பெருமளவான ஆன்மீகப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.





































இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









