வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு தரப்பினரால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்லும் பெருமளவிலான இலங்கையர்கள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வதால் எதிர்கொள்ள நேரிடும் பாரிய அபாயங்கள்:

தருவதாகக் கூறப்பட்ட வேலை அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளம் கிடைக்காமல் போதல் அல்லது குறைந்த சம்பளத்திற்குப் பணியாற்ற நேரிடுதல்.

பல்வேறு மோசடிகள் மற்றும் மனித கடத்தல்களுக்கு இரையாகுதல்.

அந்நாட்டுச் சட்டங்களை மீறுவதால் சட்டச் சிக்கல்கள் ஏற்படுதல், கைது செய்யப்படுதல் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படுதல்.

சட்டவிரோதமாகப் பணியாற்றுவதன் காரணமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு உள்ளாதல்.

கடவுச்சீட்டை இழத்தல், பணத்தை இழத்தல் மற்றும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகுதல்.

சுற்றுலா விசாவில் சென்று பின்னர் அதை தொழில் விசாவாக  மாற்றிக் தருகிறோம் அல்லது அந்நாட்டிற்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் போன்ற போலி வாக்குறுதிகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதிசெய்வதற்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்லும்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சரியாகப் பதிவுசெய்து, சட்டப்பூர்வ நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது.

சட்டப்பூர்வ வழிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects