காலநிலை மாற்றங்களால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், அதிகரிக்கப்பட்ட நன்மைகளுடன் புதிய பயிர்க் காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் சோயா பயிர்களுக்கு இக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த காப்புறுதித் திட்டம் பாதுகாப்பு வறட்சி, வெள்ளம், காட்டு யானைகளின் தாக்குதல், பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்த் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு வழங்குகிறது.
இதற்காக ஒரு ஏக்கருக்கு 6,400 ரூபாய் காப்புறுதிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பயிர்ச் சேதம் ஏற்படும் பட்சத்தில் ஏக்கருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், கௌபி, பாசிப்பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள் மற்றும் கொள்ளு ஆகிய பயிர்களுக்கும் இந்தக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பயிர்களுக்கான காப்புறுதிக் கட்டணமாக ஒரு ஏக்கருக்கு 4,200 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









