750,000 பாடசாலை மாணவர்களுக்கு Broadband வசதிகளை வழங்கத் திட்டம்!

நாட்டின் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்படும் 7.5 இலட்சம் மாணவர்களுக்கு பிராட்பேண்ட் இணைய (Broadband) வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் இணையவழிக் கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்கும் திட்டம் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects