பட்டதாரி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு ஆரம்பம் – இன்று முதல் இணையவழியில் பாடசாலை விருப்பத் தெரிவு

நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் இணையவழி முறைமை இன்று (17.11.2026) முதல் திறக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதில் காணப்படும் Teacher Recruitment Application System ஊடாக தமக்கான பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்ய முடியும்.

இதற்காக, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் கடிதத்துடன் வழங்கப்பட்ட ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லான OTP இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

எவ்வாறாயினும், தபால் மூலம் அனுப்பப்படும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களால், அந்தக் கடிதம் கிடைக்கும் வரை இணையவழி முறைமைக்குள் பிரவேசிக்க முடியாது என அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், கடிதங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தொடர்பில் விண்ணப்பதாரர்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும், உரிய நேர்முகத் தேர்வு நடைபெறும் திகதி வரை பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்வதற்கான வசதி வழங்கப்படும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் திகதிக்கு முன்னதாகவும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடைபெறும் தினத்தன்று பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects