2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20.11.2026) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்று வரை 7 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை (21.11.2026) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







