பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், பஹ்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றிற்கு அமைவாகப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏதேனும் அவசரத் தேவைகள் அல்லது உதவி தேவைப்படும் பட்சத்தில், பஹ்ரைனில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தூதரக அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூதரகத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 33530290 ஊடாகவோ அல்லது இணைப்பாளர் (Attaché) ஜி.எம்.டி. தரங்கிகாவை (+973) 3597 0290 மற்றும் (+973) 3510 6301 ஆகிய இலக்கங்களிலும், தொழிலாளர் பிரிவு உத்தியோகத்தர் திருமதி கோதமியை (+973) 3371 2875 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects