இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரிக்கும் – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான கடன் தவணையும் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் 19.11.2026 நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் மாறிவரும் நிலைமைகள் மற்றும் எதிர்காலப் போக்குகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயச் சபை இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளன.

உயர்வடைந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் என்பன உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், 2026 ஒக்டோபர் மாதத்தில் ஆண்டிற்கு ஆண்டு ஒப்பீட்டளவில் பணவீக்கம் 8.3% ஆக அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருக்கும் என்ற எதிர்வுகூறலைக் கருத்திற்கொண்டு, பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைக் குறைப்பதற்கு நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என சபை கருதியது.

இவ்வாறான கொள்கை இறுக்கமானது, உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சபை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects