வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் 136 தன்னார்வ வழிகாட்டிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கத் தீர்மானம்!

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் 136 தன்னார்வ வழிகாட்டிகளைத் திணைக்களத்தின் கள உதவியாளர் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இம் மாதம் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பல வருடங்களாகத் தீர்க்கப்படாமலிருந்த தன்னார்வ வழிகாட்டிகளின் தொழில் பாதுகாப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தற்போதைய சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் துரித ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects