சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏழாவது மதிப்பாய்வின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தவணை இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்த நாட்டின் பணவீக்கம், எதிர்வரும் சில மாதங்களில் மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் சுமார் 9 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் அண்மையில் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









