கோரப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரண உதவித் திட்டத்திற்கான விண்ணப்பம்!

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், பதிவுசெய்யப்பட்ட இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் தகுதியான பிள்ளைகளுக்கான 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்காக 2027 ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலை உபகரணங்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி மற்றும் உதவித் திட்டங்களின் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக, பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அனைத்து அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects