இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
25ஆவது இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக 25.11.2026 அன்று மாலை புதுடில்லியைச் சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், இன்று (27.11.2026) நடைபெறவுள்ள இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









