இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்க்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கௌரவ ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects